1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 1 அக்டோபர் 2016 (10:23 IST)

விஜய்யை அசத்திய தம்பிராமையாவின் மகன்

விஜய்யை அசத்திய தம்பிராமையாவின் மகன்

பிரபல இயக்குநர் மற்றும் குணச்சித்திர நடிகரான தம்பிராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார். அப்படத்தின் பெயர் "அதாகப்பட்டது மகாஜனங்களே". தெலுங்கில் பிரபல கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் இத்திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.


 
 
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தம்பிராமையாவின் மகனின் நடனத்தை பார்த்து இளைய தளபதி அசந்துபோயுள்ளார். தம்பிராமையாவின் மகன் நடித்துள்ள இப்படத்தின் பாடலில் உமாபதி சூப்பராக நடனம் ஆடியுள்ளார். மேலும் இதில்  ஜெயம் ரவி, கார்த்தி உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் உமாபதியின் நடனத்தை பாராட்டியுள்ளார்கள். 
 
தமிழ் சினிமா திரையுலகில் தனது அசத்தல் டான்ஸ் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ள நடிகர் என்றால், அது இளைய தளபதி விஜய் தான். அப்படிப்பட்ட அவரை, தனது நடனத்தால் கவர்ந்துள்ளார், தம்பிராமையாவின் மகன் உமாபதி.
 
இப்படத்தில் வரும் ஒரு பாடலை தம்பிராமையா, விஜய்க்கு போட்டு காட்டியுள்ளார். அந்த பாடலில் உமாபதியின் ஆட்டத்தை பார்த்த விஜய் அசந்துபோயுள்ளார். தவிர, உமாபதிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.