செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 ஏப்ரல் 2022 (17:22 IST)

மூஞ்சிய ஒடச்சிபுடுவேன்…. அபிராமியிடம் கோபப்பட்ட தாமரை… பிக்பாஸ் வீட்டில் அடுத்த சண்டை!

பிக்பாஸ் அல்டிமேட் இல்லத்தில் தற்போதைய எபிசோட்கள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது சிம்பு நெறியாள்கையில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. வழக்கம் போல பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகள் பிக்பாஸ் ஹவுஸ்மேட்கள் மத்தியில் குடுமிப்பிடி சண்டைகளை ஏற்படுத்தி வருகின்றன.

அதையடுத்து இப்போது கொடுத்த நானாக நானிருந்தேன் என்ற டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் தனித்தன்மையோடு நேர்மையாக எவ்வளவு உண்மையாக விளையாடினார்கள் என்பதை பற்றி பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். அந்த டாஸ்க்கில் பிக்பாஸ் அபிராமி தாமரை பற்றி விமர்சனம் செய்ய கோபமான தாமரை ‘மூஞ்சிய ஒடச்சுபுடுவேன்’ என எல்லை மீறிப் பேசினார். இதனால் பிக்பாஸ் இந்த டாஸ்க்கில் இருந்து அவரை வெளியேற்றுவதாக அறிவித்தார்.