1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (13:04 IST)

வெற்றிமாறனின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் சூர்யா நடிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்
 
இந்த நிலையில் வெற்றிமாறன் கதையில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு அதிகாரம் என்ற டைட்டில் வைக்கப்பட்டதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் என இந்த படத்தின் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
 
தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை துரை செந்தில்குமார் என்பவர் இயக்கி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிகிறது