1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (18:35 IST)

பாஜகவை எதிர்த்தாலும் உங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது: சூர்யாவுக்கு காயத்ரி ரகுராம் டுவிட்

Gayathri
நடிகர் சூர்யா கடந்த சில ஆண்டுகளாக பாஜகவை மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பதும் குறிப்பாக புதிய கல்வித் திட்டத்திற்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த பல குறைகளை சுட்டிக் காட்டிய சூர்யா தற்போது திமுக ஆட்சி நடத்தும் எந்த விமர்சனம் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளதை அடுத்து பாஜக எதிர்ப்பு நிலையில் இருந்தாலும் உங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது என்று காயத்ரி ரகுராம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தேசிய விருது பெற்ற சூர்யாவுக்கு வாழ்த்துகள். பாஜக மீது வெறுப்பு இருந்தபோதிலும், பாரபட்சம் அடிப்படையில் விருதுகள் எதுவும் இல்லை. உங்கள் உண்மையான திறமை மற்றும் செயல்திறனுக்கான விருது.