1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 ஜூலை 2022 (09:25 IST)

வாரிசு படத்தில் எத்தனை பாடல்கள்?… அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்

விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறும் என இசையமைப்பாளர் தமன் கூறியுள்ளார்.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அப் டெவலப்பராக விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் பற்றி இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் “விஜய் படங்கள் என்றாலே பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். வாரிசு திரைப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். அதில் ஒவ்வொன்றும் ஒரு எமோஷனில் இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.