1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

தளபதி 66: விஜய் லுக் புகைப்படத்தை வெளியிட்ட பிரகாஷ்ராஜ்!

vijay prakashraj
தளபதி 66: விஜய் லுக் புகைப்படத்தை வெளியிட்ட பிரகாஷ்ராஜ்!
தளபதி விஜய் நடித்து வரும் 66வது திரைப்படமான தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக பிரகாஷ்ராஜ் நடிக்க உள்ளார் என்பதும் தெரிந்தது
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் செய்தி வெளியிட்டு விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார், மீண்டும் நான் வந்துட்டேன் செக்கன் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்
 
 இந்த புகைப்படத்தில் விஜய்ம்  தளபதி 66 படத்தின் கெட்டப்புடன் இருப்பதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தளபதி படத்தில் விஜய் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் உள்பட பலர் நடிக்கின்றனர் என்பதும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என்பதும் வம்சி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது