வெள்ளி, 1 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (17:23 IST)

ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கும் அதிகமான வசூல்.. ’கோட்’ வசூலை முறியடிக்குமா தேவாரா?

தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் 450 கோடி வரை வசூல் செய்திருக்கும் நிலையில், ஜூனியர் என்டிஆர் நடித்த தேவாரா திரைப்படம் ஒரே வாரத்தில் 405 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்த தேவாரா திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான நிலையில், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 
 
முதல் நாளில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த தேவாரா திரைப்படம், ஒரு வார முடிவில் 405 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இன்னும் பல திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இன்னும் 50 முதல் 100 கோடி ரூபாய் வசூலாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
 
கோட் திரைப்படம் மொத்தம் 450 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், தேவாரா படம் கோட் படத்தின் வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும், இந்த படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய் என்ற நிலையில், 100% லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran