1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (17:27 IST)

’டிமாண்டி காலனி 2’ உள்பட 4 திரைப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள்..!

demonty colony2
ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவதை தொடர்ந்து, இந்த வாரம் அருள்நிதி நடித்த ’டிமாண்டி காலனி 2’ உட்பட நான்கு படங்கள் வெளியாகியுள்ளது.

அருள்நிதி நடித்த ’டிமாண்டி காலனி 2’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது, அதற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன. இப்போது இந்த திரைப்படம் அமேசான் ஜீ 5 ஓடிடியில் வெளியாகவுள்ளது.

அதேபோல், சூரி நடித்த ’கொட்டுக்காளி’  திரைப்படம் திரையரங்குகளில் பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த வாரம் அமேசானில் ஒளிபரப்பாகிறது.

மேலும், 'காபி' எனும் தமிழ் படம் மற்றும் 'பிளிங்க்' எனும் தமிழ் படமும் ஆகா ஓடிடியில் வெளியாகியுள்ளன. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான நானி நடித்த 'சரிபோதா சனிவாரம்' என்ற திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகுகிறது.

Edited by Siva