பாவம் அஜித்-விஜய்: சித்தார்த் கூறியது ஏன் தெரியுமா?
ஒட்டுமொத்த திரையுலகமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் விஜய் படம் உள்பட ஒருசில படங்களின் படப்பிடிப்புகள் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பது அனைவரையும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதுகுறித்து சித்தார்த் போட்ட டுவீட் ஒன்று வைரலாகியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் இதுகுறித்து சித்தார்த் மேலும் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். தன்னுடைய முந்தைய டுவீட்டுக்கு நூற்றுக்கணக்கான கமெண்ட்டுக்கள் வந்திருப்பதாகவும், அதில் முதல் நூறு கமெண்ட்டுக்களை எடுத்து பார்த்தால் ஒரு நயாபைசாவுக்கு தேறாது என்றும் கூறியுள்ளார்.
ஒருசில வேலைவெட்டி இல்லாத முட்டாள்கள் அசுத்தமான மொழி, தேவையற்ற விஷம், சம்பந்தமில்லாத கோபம் ஆகியவற்றை கலந்து கமெண்ட் அளித்துள்ளனர் என்றும் இவர்களால் மற்றாவர்கள் பெயரும் கெடுகிறது என்றும் கூறியுள்ளார். இவை அனைத்துமே அஜித், விஜய்யின் ரசிகர்கள் பதிவு செய்த கமெண்டுக்கள் என்றும் பாவம் விஜய்-அஜித்' என்றும் சித்தார்த் மேலும் பதிவு செய்துள்ளார்.