திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (14:16 IST)

ரஞ்சித் படத்தின் டிரெய்லர் இன்று வெளியீடு

இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள பரியேறும் பெருமாள் படத்தின் டிரெயிலர் இன்று வெளியாகவுள்ளது.

இயக்குனர் ரஞ்சித் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை தனது படங்களில் அதிகமாக பேசியவர். அதுமட்டுமல்லாமல் சமூகத்தில் நிலவுகிற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக களத்தில் நின்று குரல் கொடுப்பவராகவும் செயல்பட்டு வருகிறார். சமூக கொடுமைகளை எதிர்க்க கலை, இலக்கியங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

தொடர்ந்து கலை, இலக்கிய பண்பாட்டு தளங்களில் இயங்கி வரும் அவர் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் மூலமாக பரியேறும் பெருமாள் என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தினை இயக்குனர் ராம்மிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எழுத்தாளர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதிர், ஆனந்தி மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தென்தமிழக மாவட்டங்களில் நடைபெறும் சாதிக் கொடுமைகளை மையப்படுத்தி கல்லூரி காதல் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. செப்டம்பர் 28 வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரெயிலர் இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.