வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 6 டிசம்பர் 2017 (16:55 IST)

தளபதி விஜய் - சன் பிக்சர்ஸ் அதிரடி அறிவிப்பு; அப்போ ஸ்டாலின் யாரு?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய்யின் 62வது பட விளம்பரத்தில் தளபதி விஜய் என இடம்பெற்றுள்ளது.

 
மெர்சல் படத்தில் விஜய் இளையதளபதி என்ற பட்டத்தை தளபதி என மாற்றினார். இதற்கு திமுக தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது விஜய்யின் 62வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதற்கான விளம்பரத்தில் தளபதி விஜய் என்று இடம்பெற்றுள்ளது. கலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தளபதி என்றால் தமிழகத்தில் நெடுங்காலமாக அடையாளம் காணப்படுபவர் மு.க.ஸ்டாலின். இந்நிலையில் அவர்களை குடும்பத்தை சேர்ந்தவர்கள் இப்படி விஜய்யை தளபதி என குறிப்பிட்டு பட விளம்பரத்தை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதற்கு திமுக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜய் ரசிகர்கள் இதனை வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர்.