1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 பிப்ரவரி 2023 (09:00 IST)

தளபதி 67 படத்தில் சர்ப்ரைஸாக இருக்கும் பிரபல நடிகர்!

லோகேஷ் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றி அவர் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக ஏற்றியுள்ளது. விக்ரம் படத்துக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்.

இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. இதில் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், திரிஷா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தில் கைதி படத்தில் நடித்த நடிகர் ஜார்ஜ் மரியானும் இடம்பெற்றுள்ளார்.

சமீபத்தில் படத்தின் பூஜை சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் வெளியான போது, அதில் பிற நடிகர்களோடு ஜார்ஜ் மரியானும் இடம் பெற்றுள்ளார். ஜார்ஜ் மரியான் லோகேஷின் கைதி படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.