வியாழன், 30 மார்ச் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified புதன், 1 பிப்ரவரி 2023 (14:10 IST)

தளபதி 67-ல் க்யூட்டி ஸ்டார் அமலா ஷாஜி? – வைரலாகும் புகைப்படம்!

Thalapathy 67
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 67” படத்தில் அமலா ஷாஜி நடிப்பதாக வெளியாகும் தகவல் வைரலாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம் “தளபதி 67”. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ள நிலையில் நேற்று முதலாக இந்த படத்தில் நடிக்க உள்ள கலைஞர்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் என அடுத்தடுத்து தொடர்ந்து வரும் அப்டேட்டுகளால் ரசிகர்கள் ஆனந்த கூத்தாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ், விஜய் பயணித்த விமானத்தின் பயணிகள் பட்டியலை தேடி பிடித்து அதில் எந்தெந்த நடிகர், நடிகையர் பயணிக்கின்றனர் என்றும் சிலர் தேடி லீக் செய்துள்ளனர்.

Amala Shaji


இந்நிலையில் இன்ஸ்டாக்ராம் செலிபிரிட்டியான அமலா ஷாஜி தற்போது விமான நிலையத்தில் விமானத்திற்காக காத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர் இவரும் தளபதி 67 ஆன் போர்டில் இருக்கிறாரோ என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அமலா ஷாஜி “இது நடந்துவிட்டது” என்று மட்டும் கமெண்ட் செய்துள்ளார். அதை தொடர்ந்து அமலா ஷாஜி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தீவிரமாக தளபதி 67 உடன் இணைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Edit by Prasanth.K