ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (17:10 IST)

'தளபதி 63' ஆரம்பமே இப்படியா.... 100 குழந்தைகளுடன் விஜய்...

தளபதி 63 படத்தில் 100 குழந்தைகளுடன் விஜய் நடனம் ஆடும் காட்சி படமாக்கப்பட உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'தளபதி 63' படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கிறது. இதில் டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, ஆனந்த் ராஜ் மற்றும் கதிர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஜிகே விஸ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். கலை வேலைகளை மெர்சல் படங்களில் பணியாற்றிய முத்துராஜ் செய்து வருகிறார்.
 
தளபதி 63 படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். சிம்டாங்கரன் பாடலை பாடிய பம்ப பாக்யா தளபதி 63 படத்தில் ஓபனிங் பாடலை பாடியுள்ளார். தர லோக்கலாக போடப்பட்டுள்ள இந்த பாடல் தற்போது படமாக்க உள்ளார்கள். இதில 100 குழந்தைகளை விஜய்யுடன் ஆட வைத்து படமாக்க போகிறார்கள்.
 
தளபதி 63 படம் வரும் தீபாவளிக்கு விருந்தாக வர உள்ளது.