ஜார்ஜியாவில் தளபதி விஜய்: புகைப்படம், வீடியோ வைரல்!

ஜார்ஜியாவில் தளபதி விஜய்: புகைப்படம், வீடியோ வைரல்
siva| Last Modified வியாழன், 8 ஏப்ரல் 2021 (16:14 IST)
ஜார்ஜியாவில் தளபதி விஜய்: புகைப்படம், வீடியோ வைரல்
நேற்று முன்தினம் தேர்தலில் வாக்களித்த பின்னர் அன்று இரவே தளபதி விஜய் ஜார்ஜியா கிளம்பினார் என்பதும் சென்னை விமான நிலையத்தில் அவர் சென்ற காட்சியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது ஜார்ஜியாவில் தளபதி 65 படக்குழுவினர் இறங்கி விட்டதாகவும் அங்கு அவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஜார்ஜியா விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியே வந்த புகைப்படத்தை அங்கு உள்ள தமிழர் ஒருவர் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அதேபோல் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குள் நுழையும்போது அவரை ஹோட்டல் நிர்வாகிகள் வரவேற்ற புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனராக பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் ஜார்ஜியா வந்து விட்டோம் என்பதை குறிக்கும் வகையில் வெளியிட்டுள்ள வீடியோவும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதில் மேலும் படிக்கவும் :