செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (07:56 IST)

டைம் டிராவல் கதையில் விஜய்… வெங்கட் பிரபு மேஜிக் மீண்டும் நடக்குமா?

சமீபத்தில் ரிலீஸான விஜய்யின் லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தை அடுத்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதையடுத்து தளபதி 68 படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. இந்த படம் ஹாலிவுட்டில் 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என சொல்லப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கி வரும் இந்த படம் காலப்பயணம் பற்றிய படம் என்று சொல்லப்படுகிறது. இதில் அப்பா மகன் என்ற இரு வேடங்களில் விஜய் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே வெங்கட் பிரபு மாநாடு என்ற டைம் டிராவல் பற்றிய ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.