நயன்தாரா தந்தைக்கு என்ன ஆச்சு...? விக்னேஷ் சிவனுடன் சென்று சத்தியம் செய்த நயன்!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 6 ஜூலை 2021 (20:21 IST)

நடிகை நயன்தாரா நானும் ரெளடி தான் படத்தில் பணிபுரிந்த போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். இவர்கள் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு பயணித்து புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாக்குவார்கள்.

அவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என எண்ணி ரசிகர்கள் கூட்டமே பெரும் ஆவலுடன் காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நயன் விக்கியுடன் தனது வீட்டிற்கு சென்றது அவரது தந்தையை பார்க்கத்தானாம். நயன்தாரா தந்தை உடல்நலம் குன்றி இருக்கிறாராம். இப்போதைக்கு அவரின் ஆசை நயனை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்பது தானாம். அதை கேட்டு நயன் நிச்சயம் கூடிய விரைவில் திருமணம் செய்துக்கொள்வேன் என தந்தை உறுதியளித்துவிட்டு வந்தாராம். ஆக விரைவில் நயன் விக்கியின் திருமணம் நடந்தேறலாம்.


இதில் மேலும் படிக்கவும் :