தலைவர் 171 படத்துக்கான ப்ரமோஷன் ஷூட்டை தொடங்கிய லோகேஷ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 171 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.
இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியான தி பர்ஜ் என்ற படத்தின் ஒரு சிறு பகுதியை தழுவிதான் லோகேஷ் இந்த படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில் ஷூட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு ப்ரமோஷன் வீடியோவோடு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஷூட்டிங் நேற்று சென்னையில் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.