திங்கள், 22 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 3 ஏப்ரல் 2024 (10:37 IST)

லோகேஷின் அடுத்த படமும் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவலா? லேட்டஸ்ட் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.இப்போது திரைக்கதை பணிகளில் ஈடுபட்டு வரும் லோகேஷ், இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்தை இளமையாகக் காட்ட டி ஏஜிங் தொழில்நுட்பத்தை இயக்குனர் லோகேஷ் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி கவனம் பெற்றது. இந்த போஸ்டரில் ரஜினியின் கையில் கைவிலங்குகள் போல கைக்கடிகாரங்கள் பிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இதனால் படத்தைப் பல ஊகங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் இயக்கிய லியோ திரைப்படமும் ஹாலிவுட் படமான “எ ஹிஸ்டரி ஆஃப் வெஞ்சன்ஸ்” என்ற படத்தின் தழுவலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.