புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 ஜூன் 2018 (08:20 IST)

முதல்வர் வீடு அருகிலேயே பைக் ரேஸ்! என்ன செய்கிறது காவல்துறை?

சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடு அருகிலேயே நேற்று நள்ளிரவு சுமார் 50 இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு மிக வேகமாக பைக்கை ஓட்டி சென்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
சென்னையில் அவ்வப்போது இளைஞர்கள் சட்டவிரோதமாக பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் நேற்று நள்ளிரவு முதல்வர் பழனிச்சாமி வீடு உள்ள க்ரீன்வேஸ் சாலை அருகேயுள்ள திருவிக பாலத்தில் சுமார் 50 இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். பைக்கை வேகமாக ஓட்டிக்கொண்டும், வீலிங் செய்தபடியும் இளைஞர்கள் சென்றதை அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் பார்த்தனர்.
 
இதுகுறித்து காவல்துறைக்கு உரிய நேரத்தில் தகவல் அளித்தும் மிகவும் காலதாமதமாக வந்த காவல்துறையினர் ஒரே ஒரு பைக்கை மட்டும் பறிமுதல் செய்துள்ளனர். பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் விஐபிகளின் வாரிசுகளாக இருப்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். இந்த பைக் ரேஸால் உயிர்ப்பலி ஏற்படும் முன் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்