செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (19:01 IST)

விஸ்வாசம் படத்தில் பாடிய பிரபல சூப்பர் சிங்கர் பாடகர் !

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா  நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



 
சமீபத்தில் வெளியான அடிச்சுத் தூக்கு என்று தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். பாடலுக்கு இசையமைத்து பாடியுள்ளார் டி.இமான். ரசிகர்களை கொண்டாட்ட மன நிலைக்கு கொண்டு செல்லும் உற்சாகத்தோடு இந்தப் பாடல் அமைந்து ரசிகர்களின் பிலே லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.


 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் , பிரபல தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நாட்டுப்புற பாடகரான செந்தில் கணேஷ் விஸ்வாசம் படத்தில் பாடியுள்ளார். கிராமத்து கதையம்சம் உள்ள இப்படத்திற்கு இவரது குரல் ஏற்றவாறு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.