திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Modified: வியாழன், 22 மார்ச் 2018 (19:56 IST)

ஷூட்டிங் ஓவர் : கணவருடன் டூர் கிளம்பிய சமந்தா

‘நடிகையர் திலகம்’ படத்தின் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து கணவருடன் டூர் கிளம்பிவிட்டார் சமந்தா.
 


நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘நடிகையர் திலகம்’ என்ற படம் தயாராகி வருகிறது. நாக் அஸ்வின் இயக்கிவரும் இந்தப் படம், தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் தயாராகிறது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். மேலும், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, நாக சைதன்யா ஆகியோரும் நடிக்கின்றனர்.சமந்தா, இந்தப் படத்தில் பத்திரிகையாளராக நடிக்கிறார். இவருடைய போர்ஷன் சமீபத்தில் முடிந்தது. இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சமந்தா. மே 9ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், கோடை விடுமுறைக்காக கணவருடன் டூர் கிளம்பிவிட்டார் சமந்தா. யாரும் இல்லாத, அதாவது மனித தொந்தரவு அதிகம் இல்லாத இடத்துக்கு இருவரும் டூர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.