செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 8 மே 2021 (12:33 IST)

இன்றும், நாளையும் டாஸ்மாக் கடைகள் எத்தனை மணி வரை திறந்திருக்கும்?

தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பொதுமக்களின் வசதிக்காக அனைத்து கடைகளும் இன்றும் நாளையும் திறந்திருக்கும் என்றும் அனைத்து பேருந்துகளும் 24 மணி நேரமும் இயங்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் டாஸ்மாக் கடைகள் இன்றும் நாளையும் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து குடிமகன்கள் குஷி ஆகி உள்ளனர். இன்றும் நாளையும் அவர்கள் மொத்தமாக இரண்டு வாரங்களுக்கும் சேர்த்து மது பாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணி வரை செயல்படும் என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது