1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 14 மே 2024 (10:31 IST)

தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர் சங்க தேர்தலில் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி!

2024 -ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர் சங்க தேர்தல் நடைபெற்றது.
 
1201 உறுப்பினர்கள் கொண்ட இச் சங்கத்தில் 585 பேர் மட்டுமே ஓட்டு போட்டு உள்ளனர்.
   
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த தேர்தலில் 
தலைவராக போட்டியிட்ட மங்கை அரிராஜன் 310 ஓட்டு பெற்று வெற்றி பெற்றுள்ளார்
 
பொதுச் செயலாளராக ஆர் அரவிந்தராஜ் 316 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். 
 
பொருளாளராக அறந்தாங்கி சங்கர் 296 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் 
 
துணைத் தலைவர் பதவிக்கு எஸ்வி சோலைராஜா 258 வாக்குகளும் குட்டி பத்மினி 256 ஓட்டுகளும் வாங்கி துணை தலைவர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.
 
இணை செயலாளர் பதவிக்கு ஆதித்யா 296 வாக்குகளும் விக்ராந்த் 278 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.