புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 2 பிப்ரவரி 2019 (18:19 IST)

தமிழ் ராக்கர்ஸில் கூட தத்தளிக்கும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'

சிம்பு, கேத்ரின் தெரசா, மேகா ஆகாஷ், நடிப்பில் சுந்தர் சி இயக்கிய 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தை பார்த்த சிம்பு ரசிகர்களே புலம்பியபடியே சென்றனர். 'AAA'  படத்தை விட கொஞ்சம் சுமார் என்ற அளவிலேயே இந்த படத்தின் விமர்சனம் இருந்தது. இதேபோன்ற கதையை தேர்வு செய்து நடித்தால் ராஜா அல்ல, சேவகனாக கூட சிம்புவால் ஆக முடியாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கம்போல் இந்த படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது. ஆனால் சமீபத்தில் வெளியான புதிய திரைப்படங்களில் இந்த படம் தான் குறைந்த அளவு தமிழ் ராக்கர்ஸில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் தமிழ் ராக்கர்ஸில் கூட இந்த படத்தை பார்க்க ஆளில்லை  என்ற பரிதாப நிலையே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிம்பு அடுத்து நடிக்கவுள்ள 'மாநாடு' திரைப்படம் தொடங்கப்படுமா? அல்லது டிராப் ஆகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு வதந்தி பரவி வருகிறது. ஏற்கனவே 'இந்தியன் 2' படத்தில் இருந்து சிம்பு கழட்டிவிடப்பட்ட நிலையில் ஒருவேளை மாநாடு திரைப்படமும் டிராப் ஆனால் சிம்புவின் கையில் படங்களே இல்லை என்ற நிலைதான் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.