1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (09:48 IST)

ஆங்கிலத்தில் டப் செய்யப்படும் தமிழ்ப் படங்கள்… யுடியூபில் வைரல்!

தமிழ் படங்கள் யுடியூபில் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு வெளியே திரைப்படங்கள் ஒளிபரப்பாவது அதிகமாகிவருகிறது. கடந்த சில வருடங்களாக தமிழ் படங்களுக்கு இந்தி டப்பிங்கில் நல்ல மார்க்கெட் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்போது யுடியூபில் தமிழ் படங்கள் ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு அதிகமாக வெளிவர ஆரம்பித்துள்ளன.

சமீபத்தில் பட்டத்து யானை மற்றும் நாடோடிகள் ஆகிய படங்கள் இதுபோல வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த படங்களில் ரசிகர்கள் தங்கள் மனம்கவர்ந்த காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து மீம்ஸ்களும் ட்ரோல்களும் செய்ய ஆரம்பித்துள்ளன.