1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:50 IST)

பிரமாண்ட படத்தில் பாகுபலி ஹீரோவுக்கு தம்பியான தமிழ் ஹீரோ !

இந்தியாவின் டாப் மோஸ்ட் இயக்குநர் என்று பெயரெடுத்த ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான பாகுபலி1, 2 ஆகிய இரண்டு படங்களும்  வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் சாதனை  படைத்தது.

இதில் ஹீரோவாக நடித்த பாகுபலியின் மார்க்கெட் இப்படத்திற்குப் பிறகு அதிகரித்தது. இந்திய அளவில் அறிப்பட்டார். அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார்.

இந்நிலையில்  பிரபாஸ் நடித்த சாஹோ படத்தைத் தயாரித்த யுவிகிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவீஸ் இணைந்து தயாரிக்கும் ராதே ஷ்யாம் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகவுள்ள  இப்படத்தை ராதா கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். இதில் பூஜா ஹெக்டே பிரபாஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

மேலும் தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவான அதர்வா இப்படத்தில்  பிரபாஸுக்கு தம்பியாக நடிக்கவுள்ளார் என்றும் இதுகுறித்த முறையான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.