1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:34 IST)

அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தென்னிந்திய மொழிகளும் நடித்துவருகிறார்.

இந்நிலையில், இவர் நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படம் வரும் அக்டோபர் 2ம்  தேதி ஓடிடியில் ரிலீசாகிறது. அதேபோல் சீனுராமசாமி இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படமான மாமனிதன் படமும்  ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும், அதேபோல் அவரது துக்ளக் தர்பார், மற்றும் கடைசி விவசாயி ஆகிய படங்களும் ஒடிடி தளத்தில்தான்  ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

எனவே, ஒரே வருடத்தில் நான்கு படங்கள் தியேட்டரில் ரிலீசாகாமல ஒடிடி தளத்தில் ரிலீசாவதால் விஜய் சேதுபதி கவலையில் உள்ளதாகவும், தியேட்டர் உரிமையாளர்களின் அதிருத்திக்கு விஜய் சேதுபதி ஆளாவது ஒருபுறம் இருந்தாலும், ஒடிடி தளத்தில் படங்கள் வெளியாகி வெற்றிபெருமா என்று ஆழ்ந்த யோசனையில் அவர் உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.