திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (14:22 IST)

ஷங்கர்- விக்ரம் கூட்டணியின் மெஹா ஹிட் அந்நியன் ரி ரிலீஸ் திட்டம்!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. சுமார் 27 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அப்போது மிக அதிக பட்ஜெட்டில் அந்த படம் உருவானது. அப்போதைய மதிப்பில் தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது.

மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் விக்ரம்மின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அதை இந்தியில் ரீமேக் செய்யவும் இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது அந்நியன் திரைப்படம் 18 ஆண்டுகள் கழித்து 4கே ரெசல்யூஷனில் ரிமாஸ்டர் செய்யப்பட்டு விரைவில் ரி ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை அந்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.