1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 7 ஜூலை 2018 (18:36 IST)

ஸ்ரீரெட்டி லிஸ்டில் பிரபல தமிழ் இயக்குநர்

மிகப் பெரிய தமிழ் இயக்குநர் ஒருவர் பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார் என்று தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

 
சினிமா துறையில் நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கை அழைக்கும் பழக்கம் உள்ளது என நடிகைகள் தொடர்ந்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். அந்த வரிசையில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடத்திய போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
பிரபல தெலுங்கு நடிகர், இயக்குநர் உள்பட பலர் மீது ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டினார். இந்நிலையில் பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
தமிழ் சினிமாவிலும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர் பட வாய்ப்பு தருவதாக கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார். நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன் என்று கூறியுள்ளார்.