1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (17:47 IST)

நயன்தாராவின் அடுத்த படத்தில் வில்லனாக நடிப்பது இந்த இயக்குனரா?

nayanthara
நயன்தாராவின் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது 
 
நயன்தாரா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று O2. இந்த படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த படத்தில் பரத் மணிகண்டன் என்பவர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இவர் அருள்நிதி நடித்த ‘கே 13ஜ்’  திரைப்படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ஜிஎஸ் விக்னேஷ் இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நயன்தாரா ஒரு தாவரவியல் நிபுணர் ஆக நடித்து வருகிறார் என்பதும், தனது குழந்தைக்கு வரும் ஆபத்தை தடுக்க அவர் எடுக்கும் முயற்சி தான் இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது