1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (13:25 IST)

எம்.எஸ்.தோனி தயாரிக்கும் தமிழ் திரைப்படத்தில் நயன்தாரா; ஆச்சரிய தகவல்

dhoni nayanthara
எம்.எஸ்.தோனி தயாரிக்கும் தமிழ் திரைப்படத்தில் நயன்தாரா; ஆச்சரிய தகவல்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான எம்எஸ் தோனி தமிழ் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
அவர் தயாரிக்கும் முதல் தமிழ் தமிழ் திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது
 
தமிழ் திரைப்படங்கள் தயாரிப்பதற்காக தோனி ஆரம்பித்துள்ள நிறுவனத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் இணைந்துள்ளதாகவும், அவர் தான் தோனியின் நிறுவனத்தை கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது