சினிமாவுக்கு நடிகை சமந்தா முழுக்கு?

சினிமாவுக்கு நடிகை சமந்தா முழுக்கு?


K.N.Vadivel| Last Modified வியாழன், 12 மே 2016 (09:46 IST)
சினிமாவுக்கு நடிகை சமந்தா முழுக்கு என்ற தகவல் அறிந்து மிகவும் கொதித்துப்போய் கிடக்கிறார் நடிகை சமந்தா.
 
 
நடிகை சமந்தா நடிப்பில், தற்போது வெளிவந்த விஜய்யுடன் நடித்த தெறி மற்றும் சூர்யாவுடன் நடித்த 24 ஆகிய இரு தமிழ்ப் படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.
 
அந்த சந்தோஷத்தில், தனது டிவிட்டர் பதிவில், கடும் இக்கட்டான நிலையை தாண்டிவிட்டேன். எனது கடைசிப் படம் வெளியாகிவிட்டது. நான், இன்று நிம்மதியாகத் தூங்குவேன். எனவே, இனி சிறிது காலத்திற்கு புதிய படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று பதிவிட்டார்.
 
இந்த நிலையில், நடிகை சமந்தா சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாக அவரது மறைமுக எதிரிகள் வதந்தியை பற்றவைத்து பரவச் செய்தனர்.
 
இதனால், செமகடுப்பான நடிகை சமந்தா, நான், சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கப் போவதாக எந்த சூழ்நிலையிலும் சொல்லவே இல்லை என மீண்டும் செமகடுப்பில் விளக்கம் அளித்து, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.
 
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :