வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (08:51 IST)

’வேதாளம்’ ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடி இவர் தான்!

தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’வேதாளம்’ திரைப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது
 
போலோசங்கர் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அஜித் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார் என்பதும் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வேதாளம் திரை படத்தில் அஜித் ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வந்த நிலையில் அந்த கேரக்டரில் தெலுங்கில் தற்போது தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சிரஞ்சீவி ஏற்கனவே ஆச்சாரியா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது