1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Tamannaah talked about acting in bedroom scenes

நான் போட்ட விதிகளை நானே மீறியது ஏன்?.. படுக்கையறைக் காட்சி குறித்து தமன்னா விளக்கம்!

தமன்னா
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.

ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது சினிமாவில் 18 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் பாலிவுட் பட வாய்ப்புகள் அவருக்கு அதிகமாக வர ஆரம்பித்துள்ளன. பாலிவுட்டில் அடுத்தடுத்து ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகியவற்றில் நடித்துள்ளார். இந்த இரு படங்களிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்திருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தமன்னா படுக்கையறைக் காட்சிகளில் நான் நடிக்கமாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது அவரே அந்த விதியை மீறியுள்ளார். இதுபற்றி விளக்கமளித்துள்ள அவர் “நான் முன்பு படுக்கையறை காட்சிகளில் நடிக்கக் கூடாது என்ற விதியை போட்டுக்கொண்டேன். ஆனால் இப்போது நானே அதை மீறியுள்ளேன். அடுத்த கட்டத்துக்கு செல்வதற்காக இந்த முடிவை நான் எடுத்தேன். ஏன் படுக்கையறைக் காட்சிகளில் நடிக்கக் கூடாது என்ற கேள்வியை கேட்டுக் கொண்டேன். கிண்டல் செய்பவர்கள் பற்றி எனக்குக் கவலை இல்லை” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஷங்கரின் கேம்சேஞ்சர் படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமம் இத்தனை கோடியா?