திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (22:38 IST)

''ஜெயிலர்'' பட புரமோசன் நிகழ்ச்சியில் நடனமாடிய தமன்னா ! ரசிகர்கள் மகிழ்ச்சி

tamannaah
ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ திரைப்படம்  பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி  ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தில் முதல் சிங்கில் காவாலா, 2 வது சிலில் குஹூம், 3 வது சிங்கில் ஜுஜுபி நேற்று ரிலீஸானது.

இந்த நிலையில், இப்படத்தில் நடித்துள்ள நடிகை தமன்னா வடஇந்தியாவில் இப்படத்தின் புரமோசன் பணிகளில் இறங்கியுள்ளார். அப்போது, டில் ஆ தில்பாரா( காவாலா0 என்ற பாடல் வெளியீட்டு விழாவில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மேடையில்  நடனமாடினார்.