1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (15:42 IST)

எனக்கு வரப்போகும் மாப்பிள்ளை டாக்டரா? தொழிலதிபரா? நடிகை தமன்னா விளக்கம்

Tamanna
எனக்கு டாக்டர் ஒருவருடன் திருமணம் என்றும் தொழில் அதிபர் ஒருவருடன் திருமணம் என்றும் வதந்திகள் கிளம்பி வருகிறது. இது அனைத்தும் பொய்யான தகவல் என்றும் நான் எனது திருமண தேதியை முறைப்படி அறிவிப்பேன் என்று நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். 
 
சினிமாவில் 17 ஆண்டுகளாக தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. அவர் விஜய் அஜித் போன்ற பெரிய ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தமன்னா வீட்டில் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார்கள் என்றும் வரன் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஆனால் இன்னும் தமன்னாவுக்கு சரியான மாப்பிள்ளை கிடைக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தமன்னாவை திருமணம் செய்பவர் டாக்டர் என்றும் தொழிலதிபர் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் திருமணம் குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் திருமணத்தின் போது நானே அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்று தெரிவித்து உள்ளார்.
 
Edited by Mahendran