1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 16 அக்டோபர் 2018 (18:23 IST)

ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை: லஷ்மி ராமகிருஷ்ணன் புகார்

படத் தயாரிப்பாளர் இயக்குனர் நடிகையுமான நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன், சென்னை அம்பத்தூர் இணை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை புகார் அளித்தார். 
அந்த புகார் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் ஐயப்பந்தாங்கலில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறேன் அங்கு சுமார் ஆயிரத்து 600 அபார்ட்மென்ட்கள் உள்ளன.  2013ம் ஆண்டில் கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதே யாரோ ஐந்து பேர் சேர்ந்து ஒரு அசோசியேஷன் ஆரம்பித்தார்கள்.
 
2015 முதல் flat registration ஆனதும் முறையாக நாங்கள் ஒரு அசோசியேஷன் ஆரம்பிக்க 2300 பேர் சேர்ந்து ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்த போது பதிவு  செய்ய மறுத்து விட்டனர்.
 
இந்நிலையில் ஏற்கனவே உள்ள சங்கத்தில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக் கேட்டதால் எனக்கு மிரட்டல்கள் வருகிறது. என்னைப்பற்றி இணைய தளங்களிலும் அவதூறாக  செய்திகளை பரப்பி வருகிறார்கள். இதனால் கடந்த ஓராண்டாக மன உளைச்சலுக்கு ஆளானேன். இப்போது வெளி நபர்கள் மூலம் எனக்கு மிரட்டல் வருகிறது இது குறித்து தக்க நடவடிக்கை  எடுக்கும்படி காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து உள்ளேன் என்று தெரிவித்தார்.