காம்ப்ரமைஸ் செய்யாவிட்டால் திறமை நிராகரிப்பு - பிரபல நடிகை

Sinoj| Last Modified திங்கள், 8 மார்ச் 2021 (22:12 IST)
 

பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க அவர்களுடன் காம்ரமைஸ் செய்து கொள்ளாவிட்டால் திறமை நிராகரிக்கப்படுவதாக பிரபல நடிகை தகவல் தெரிவித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல நடித்துள்ளவர் நடிகை ஷாலு ஷம்மு.

இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் இன்று மகளின் தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டு அதிர்ச்சி அளித்துள்ளார்.

அதில், பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கு அவர்களுக்கு காம்ரமைஸ் செய்யாவிட்டால் பெண்களின் திறமை நிராகரிக்கப்படும்  எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் சமசரம் செய்ய மாட்டோம். இத்துன்புறுத்தலை நிறுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :