புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 15 நவம்பர் 2017 (16:58 IST)

ஆபாசப் படமெடுத்து மிரட்டல்; நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது

மருத்துவ மாணவியை மிரட்டிய வழக்கில் நடிகை புவனேஷ்வரியின் மகன் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
மருத்துவக் கல்லூரி மாணவியை ஆபாசப் படமெடுத்து மிரட்டிய வழக்கில் நடிகை புவனேஸ்வரியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ், தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் புவனேஸ்வரி. விபச்சார தடுப்பு வழக்கில் சில  ஆண்டுகளுக்கு முன் இவரை கைது செய்தனர் போலீசார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவே பரபரப்புக்குள்ளான பல  நிகழ்வுகள் அரங்கேறின.
 
விபச்சார வழக்கில் பல முறை போலீசாரால் கைது செய்யப்பட்டவர் நடிகை புவனேஸ்வரி. இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக நடிகை புவனேஸ்வரி மீது சமீபத்தில் புகார் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது புவனேஸ்வரியின் மகன் மித்து சீனிவாசன், மருத்துவ மாணவி ஒருவரை ஆபாசமாகப் படமெடுத்து இணையதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டியுள்ளார். மேலும் படத்தை ஆபாசமாக உள்ளது போல சித்தரித்து வெளியிட்டுள்ளார். இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் மித்து சீனிவாசனை சென்னை மாநகரப் போலீசார் கைது செய்துள்ளனர்.