1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (11:00 IST)

22 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தோடு இணையும் நடிகை! அஜித் 61 அப்டேட்

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கவுள்ள படத்தில் கதாநாயகியாக தபு நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர். இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். வலிமை ரிலீஸுக்கு பின் இதற்கான வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் இசையமைப்பாளராக பணிபுரிய அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் இப்போது ஜிப்ரான் அந்த படத்துக்கு இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இசையமைப்பாளர் குறித்து ஆடியோ நிறுவனத்துக்கும் இயக்குனர் வினோத்துக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித் 61 படத்தின் இசை உரிமையை வாங்க உள்ள சோனி நிறுவனம் அனிருத்தைக் கைகாட்ட, வினோத்தோ ஜிப்ரான்தான் வேண்டும் என்று உறுதியாக இருக்கிறாராம். அதனால் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படாமல் உள்ளதாம்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக தபு நடிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் இருவரும் 1999 ஆம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.