1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (15:03 IST)

டாணாக்காரன் இயக்குனரின் அடுத்த பட அப்டேட்!

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் ஏப்ரல் 8 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை ஜெய்பீம் மற்றும் அசுரன் ஆகிய படங்களில் நடித்திருந்த வெற்றிமாறனின் உதவியாளர் தமிழ் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகிப் பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றது.

இந்த படம் வெளியாகி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் இப்போது பல படங்களில் நடிகராக நடித்து வரும் இயக்குனர் தமிழ், அடுத்து தான் இயக்கும் படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.

ராமேஸ்வரத்தில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக இந்த படம் உருவாக உள்ளதாகவும், தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கார்த்தி நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.