திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2023 (12:21 IST)

ஹன்சிகாவின் திருமண வீடியோ: ரிலீஸ் தேதியை அறிவித்த ஹாட்ஸ்டார்..!

Hansika
நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ ரிலீஸ் ஆகும் தேதியை ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
நடிகை ஹன்சிகாவுக்கும் சோஹைல் கதுரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்பூரில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த திருமணத்தின் வீடியோவை ஒளிபரப்பும் உரிமையை ஹாட்ஸ்டார் பெற்றதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதுமட்டுமின்றி இந்த திருமண வீடியோவின் டிரைலரும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி ஹன்சிகாவின் திருமண வீடியோ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் 
 
ஏற்கனவே நயன்தாராவின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்புவதாக இருந்தது. ஆனால் அவருக்கு திருமணம் ஆகிய ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அந்த வீடியோ ஒளிபரப்பாகவில்லை. இந்த நிலையில் தற்போது ஹன்சிகாவின் திருமண வீடியோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran