டி சீரிஸ் தயாரிப்பாளர் மேல் பெண் பாலியல் புகார்!
டி சீரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பூஷன் குமார் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல ஆடியோ நிறுவனமான டி சீரிஸ் நிறுவனத்தின் தற்போதைய உரிமையாளருமான பூஷன் குமார் மீது பெண் ஒருவர் தனக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். தான் சினிமாவில் ஏதாவது வேலை வாங்கித்தருமாறு கேட்டதாகவும், அதற்கு தன்னுடைய செல்போன் எண் மற்றும் புகைப்படங்களைப் பெற்ற அவர் பங்களாவுக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் கொடுத்து அதை வீடியோவாக எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் பூஷன் குமார் மீது மும்பை போலீஸார் இந்திய தண்டனை சட்டம் 376 (பாலியல் வன்கொடுமை), 420 (ஏமாற்றுதல்), 506 (குற்றம் கருதி மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.