“சிம்பு ஒத்தக்கால்ல நின்னாரு…. “ பேசும்போதே உணர்ச்சிவசப்பட்ட T ராஜேந்தர்
நடிகர் டி ராஜேந்தர் நேற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களில் ஒருவர் T ராஜேந்தர். இயக்கம், ஒளிப்பதிவு, இசை நடிப்பு, தயாரிப்பு, விநியோகம் என பல துறைகளில் வெற்றியாளராக பவனி வந்தவர் டி ராஜேந்தர். இவரின் மகனான சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இந்நிலையில் டி ராஜேந்தர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
செல்வதற்கு முன்னர் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “என் மகன் சிம்பு தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு 12 நாட்களாக அமெரிக்காவில் எனக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார். அவர் எனக்கு மேல் சிகிச்சைக்கொடுக்க வெளிநாடு செல்லவேண்டும் என ஒத்தக்காலில் நின்னதால்தான் நான் அமெரிக்கா செல்கிறேன். சிகிச்சைக்குப் பிறகு வந்து உங்களை சந்திக்கிறேன்” எனக் கூறினார். சிம்பு பற்றி பேசும் போதும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார் TR.