செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : வியாழன், 22 ஜூன் 2017 (14:59 IST)

வருங்கால முதல்வர் தளபதி விஜய்: இப்பவே துண்டு போடும் பாஜக! (வீடியோ இணைப்பு)

வருங்கால முதல்வர் தளபதி விஜய்: இப்பவே துண்டு போடும் பாஜக! (வீடியோ இணைப்பு)

ரஜினியை தங்கள் கட்சிக்கு இழுத்து இழுத்து பார்த்து டயர்ட் ஆகியிருக்கும் பாஜக தற்போது விஜய்க்கு குறி வைத்துள்ளது. நடிகர் ரஜினியும், விஜயும் நீண்ட காலமாக அரசியலுக்கு வருவது போன்ற தோன்றத்தை உருவாக்கி வந்தனர்.


 
 
ஒரு வழியாக ரஜினி ரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியை காட்டி வருகிறார். விருது நிகழ்ச்சி ஒன்றில் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் பேசிய நடிகர் விஜய் தனது அடுத்த படமான மெர்சல் படத்தில் தனது பெயருக்கு முன்னால் தளபதி என குறிப்பிட்டுள்ளார்.
 
இத்தனை நாட்களாக இளைய தளபதி என குறிப்பிடப்பட்ட விஜய் தற்போது தளபதி என குறிப்பிடப்படுவது அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியாக இருக்குமோ என பலரும் மண்டையை குழப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுகையில் வருங்கால முதல்வர் தளபதி விஜய் என கூறியுள்ளார்.
 
நடிகர் விஜய் தனது 43-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது 61-வது படத்தின் பெயர் மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதனையடுத்து பல்வேறு பிரபலங்கள் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் கூறிய வாழ்த்தில், மக்களுடைய கஷ்டங்களை தெரிந்தவர் தான் அரசியலுக்கு வர வேண்டும். அந்த வகையில் மக்களின் கஷ்டங்களை அறிந்தவர் நடிகர் விஜய். எனவே விஜய் அரசியலுக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. வருங்கால முதல்வர் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.