செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (17:07 IST)

ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் புதிய வெப் சீரிஸ்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுழல் என்ற வெப் சீரிஸ் பற்றிய அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ப்ரைம் வீடியோவால் வெளியிடப்பட்டது.

விக்ரம் வேதா படத்தின் மூலம் முன்னணி இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி தம்பதியினர் தற்போது இந்தியில் அந்த படத்தை இயக்கி வருகின்றனர். இதையடுத்து இப்போது அவர்கள் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றையும் தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் ஆகியோர் நடிப்பில் புஷ்கர்- காயத்ரி கதையில், பிரம்மா மற்றும் அணுசரன் ஆகியோர் இயக்கத்தில் சுழல் என்ற வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. இந்த சீரிஸின் புதிய வித்தியாசமான போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இதையடுத்து தற்போது இந்த சீரிஸ் ஜூன் 17 ஆம் தேதி முதல் நேரடியாக ப்ரைம் வீடியோவில் 5 மொழிகளில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.