ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று டிரைவர் ஜமுனா. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தின் 2 ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர்களில் ரத்தம் சொட்ட சொட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும் காரின் முன் டீ குடிக்கும் புகைப்படம் ஒன்றும் உள்ளது
கேப் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கின்ஸ்லின் என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது