செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜனவரி 2021 (10:57 IST)

அடுத்த படம் சிம்புவுடன் இல்லை… அக்கட தேசத்துக்கு பறந்த சுசீந்தரன்!

சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தை இயக்கிய சுசீந்தரன் அடுத்ததாக தெலுங்கு நடிகர் மஞ்ச் மனோஜை வைத்து ஒரு படத்தை  இயக்க உள்ளாராம்.

சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள ஈஸவரன் படத்தை சுசிந்தரன் ஒரு மாதத்துக்குள் இயக்கி முடித்து கோலிவுட்டை ஆச்சர்யப்பட வைத்தார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸாகியுள்ளது. மாஸ்டர் எனும் பெரும் புயலுக்கு இடையில் ஈஸ்வரன் கவனிக்கப்படாமலே போனது. இந்நிலையில் ஈஸ்வரன் படம் முடியும் முன்னரே இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் உருவாக்குவது என முடிவு செய்தனர்.

ஆனால் இப்போது அந்த முடிவு கைவிடப்பட்டுள்ளது அல்லது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. சுசீந்தரன் இப்போது தெலுங்கு நடிகர் மோகன் பாபு மகன் மஞ்ச் மனோஜ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாகும் படத்தை இயக்க உள்ளாராம். இதற்காக அவர் இப்போது ஆந்திராவில் முகாமிட்டுள்ளாராம்.