‘பாயும் புலி’யாகும் சுசீந்திரன்


Cauveri Manickam (Abi)| Last Updated: ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (13:20 IST)
ஒரு படம் ரிலீஸாவதற்குள்ளேயே அடுத்த படத்தையும் முடித்துவிட்டார் சுசீந்திரன்.

 

 
‘மாவீரன் கிட்டு’ படத்துக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சுந்தீப் கிஷண், விக்ராந்த், மெக்ரீன் பிர்ஸடா, ஹரீஷ் உத்தமன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பே ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு படம் ரிலீஸாக இருக்கிறது.
 
அதற்குள், அடுத்த படத்தையும் எடுத்துவிட்டார் சுசீந்திரன். ‘ஏஞ்சலினா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், புதுமுகங்கள் நடித்துள்ளனர். சூரி, அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் மீதமுள்ள படப்பிடிப்பையும் முடிக்க உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :